Missionaries Stories

ஏமி கார்மிக்கேல்

Posted on 28th April 2015 11:55:11 PM

      ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்…  
கிறிஸ்துவுக்காய் அநேகர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து அவரை தங்கள் வாழ்வில் பிரதிபலித்த தேவ பிள்ளைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த இதழில் ஏமி கார்மிக்கேல் அம்மையாரை பற்றி படிக்கப் போகிறோம்.


      இவர் 1867ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதியில் அயர்லாந்து நாட்டில் பிறந்தார். இவருடைய தரிசனம் நம்முடைய இந்திய நாட்டை நோக்கியே இருந்தது. ஆகையால் 1912ம் ஆண்டு, ஓர் மாலை நேரம். தேவனோடு உறவாட சென்றவர், ஆம்...சூரியன் தன் கண்களை மூடிக் கொண்டிருந்த நேரம், ஏமி கார்மிக்கேல் அம்மையாரின் கண்கள் தெளிவாக திறந்துக் கொண்டிருந்தன. காதுகள் அத்தொனியைக் கூர்மையாக கேட்டுக் கொண்டிருந்தன.


      “ஊழியத்திற்குப் புறப்பட்டுப் போ”. இதுவே அந்த சத்தம். உடனே இறைவன் பாதம் தன்னை ஒப்புக் கொடுத்தார். ஜப்பான் நாட்டை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தார். 15 மாதங்கள் ஊழியத்தை முடித்து இலங்கை சென்று பணியாற்றினார்.


      அக்காலத்தில் இந்தியாவில் தேவதாசி முறைகள் பின்பற்றப்பட்டு, சமுதாயம... Read More >>

ஜான் பேட்டன்

Posted on 28th April 2015 11:53:21 PM

மனிதரைத் தின்ற மக்களின் அருட்பணியாளர்

     நீங்கள் என்னை அம்பு எய்து, சுட்டு கொன்று போடலாம். ஆனால் நானோ உங்களுடைய உண்மையான நண்பன். நான் நேசித்து சேவிக்கிற என் ஆண்டவர் இயேசுவிடம் என்னை அதிசீக்கிரத்தில் அனுப்புகிறீர்கள் என்பதைத் தவிர மரணம் என்னை ஒன்றும் செய்யாது. உங்கள் மத் தியில் மரிக்க நான் பயப்படவில்லை என முழங்கினார் ஜான் பேட்டன். பயங்கர ஆயுதங்களோடு மிருகத்தனமாகத் தன்னைத் தாக்க வந்த மிலேச்சர்கள் நடுவில் தைரியமாய் நின்றார் ஜான் பேட்டன். அன்பும் இரக்கமும் அவர் முகத்தில் காணப்பட, அமைதியும் தைரியமும் உள்ளவராய் முழங்கால்படியிட்டார். கிறிஸ்துவின் அன்பைக் கூற வந்த இத்தெய்வத் தூதுவரை எந்நேரத்திலும் கொல்ல ஆயத்தமாயிருந்தனர் அம்மிலேச்சர்கள்.


ஆரம்ப வாழ்க்கை

      ஜான் பேட்டன் 1824-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் தெய்வ பயமிக்க பெற்றோர்களுக்குப் பிறந்தவர். ஜெபவீரரான அவருடைய தகப்பன் வாணிகம் செய்து வந்தார். அவர்களுடைய இல்லத்தில் ஓர் அறை பரிசுத்த ஸ்தலம் என்றழைக்கப்பட்டது. ஒரு நாளில் மூன்று முறை ஜானின் தகப்பனார் அவ்வறைக்குள் சென்று, தன் குடும்பத்திற்காகவும், ஸ்காட்லாந்து நாட்டிற்காகவும் உலகம் முழுமைக்காகவும் ஊன்றி ஜெபிப்பார். தகப்பனின் சிறந்த தெய்வீக ஜெபவாழ்க்க... Read More >>

டேவிட் லிவிங்ஸ்டன்

Posted on 24th April 2014 02:23:30 PM

அறியப்படாத ஆப்ரிக்காவுக்கு வழிவகுத்துக்கொடுத்தவர் டேவிட் லிவிங்ஸ்டன்(1813 - 1873)

     அன்புள் அம்மா! இதோ இந்தப் பணம் நான் ஒரு வாரத்தில் சம்பாதித்தது என்று டேவிட் மிக உற்சாகத்தோடு தன் தாயின் மடியில் அவனுடைய சம்பளத்தை எடுத்து வைத்தான். குடும்பத்தின் வறுமையை ஓரளவு அவனுடைய சம்பாத்தியத்தால் குறைக்க முடிகிறது என்று அவன் உணர்ச்சி வசப்பட்டான். இந்தப் பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறாய் டேவிட் என்று அவன் தாய் கேட்க, அம்மா நீங்கள் அனுமதித்தால் இலத்தீன் மொழியின் இலக்கணப் புத்தகம் வாங்க விரும்புகிறேன் என்று நிதானமாய் பதிலளித்தான். அவனுக்கு படிக்கவேண்டும் என்று அத்தனை ஆர்வம் இருந்தது. அனால் வறுமை அவனுக்கு கல்வி கற்கும் வாய்ப்பை மறுத்துவிட்டது.

ஆரம்ப வாழ்க்கை

     1813ம் ஆண்டு மார்ச் மாதம் பத்தொன்பதாம் திகதி டேவிட் லிவிங்ஸ்டன் ஸ்கொட்லாந்து தேசத்தில் பிறந்தான். அவனுடைய பெற்றோர் மிகவும் ஏழைகள். ஆனால் உண்மைக் கிறிஸ்தவர்கள். குழந்தைப் பருவத்தில் டேவிட் கிறிஸ்தவ ஒழுக்கங்களைப் பெற்றோரிடமே கற்றுக்கொண்டான். ஒன்பது வயதினிலேயே வேதாகமத்தை மிகக் கருத்தோடு படிக்கலானான். நூற... Read More >>

வில்லியம் கேரி

Posted on 24th April 2014 02:23:25 PM

வில்லியம் ஹேரி(1760 - 1834)

வில்லியம் கேரி வேத புத்தகத்தைப் பல மொழிகளில் மொழிபெயர்த்து, உலகின் மூன்றில் ஒரு பகுதிக்குக் கொடுத்து உதவியர். இன்றைய மிசனறி இயக்கங்களின் தந்தை என்ற நிலையை அடைந்தவர் வில்லியம் கேரி என்று அவரை அவரது சிறு வீட்டில் செருப்பு செப்பனிடும் வாலிபனாகக் கண்டவர்கள் எவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

சிறுவனான கேரி

வில்லியம் கேரி சிறுவனாக இருக்கும்போதே தன்னுடைய விடாமுயற்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினார். ஒரு தீரச் செயலை செய்ய ஆரம்பித்து அதை விடாது தொடர்ந்து செய்து முடிப்பார். தீரச்செயல்களில் மிகவும் விருப்பம் கொண்டவர். ஒருமுறை ஒரு மரத்தின் உச்சியில் இருக்கும் குருவிக்கூட்டை ஆராய்ந்து பார்ப்பதற்காக அவா; மரத்தில் ஏறியபோது அவர் வழுக்கி கீழே விழுந்தார்.

கரம் கால்களில் அடிபட்ட அவருக்குக் கட்டுகள் போட்டு அவரை அவரது தாயார் படுக்கையிலே படுக்க வைத்தார். ஆனால் சிறுவனான கேரியினாலே தோல்வியை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அவர் மறுபடியும் சென்று மரத்தில் ஏற அந்தக் குருவியின் கூட்டைக் கையில் கொண்டுவருவதை அவர் தாயார் கண்டார்.

வில்லியம் விளையாட்டுப் போட்டிகளிலும், பிரயாணம் செய்வதிலும் அதிக விரும்பம் கொண்டவர... Read More >>

சாது சுந்தர்சிங்

Posted on 24th April 2014 02:23:01 PM

இந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங்(1889 - 1929)

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது பாய்ந்து கொண்டிருந்தது. கற்களும் முட்களும் அவரது கால்களைக் கிழித்துக்கொண்டிருந்தன. என்றாலும் பனியால் மூடிய மலைகள்மீது அவர் நடந்து கொண்டே இருந்தார். அவருடைய இரத்தம் கசியும் பாதங்கள் அவருக்குப் பின்னால் வெண்மையான பனியின்மீது அடிச்சுவட்டை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. ஒரிடத்தில் அவர் உட்கார்ந்து தன் கால்களின் புண்களைக் கட்ட ஆரம்பித்தார். அவ்வழியே அவருக்குப் பின்னாக வந்த ஒருவர் அவரைப் பார்த்து நின்று அவரோடு பேச ஆரம்பித்தார். ஐயா எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு என்னுடைய அருமை இரட்சகராம் இயேசு கிறிஸ்துவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சாது சந்தர் சிங் பதில் கூறினார்.

ஏன் நீங்கள் இரத்தம் கசியும் வெறும் கால்களால் மலைமீது இவ்விதமாகப் பயணம்செய்யவேண்டும்?

கல்வாரி சிலுவையிலே தம் கால்களில் இரத்தம் சிந்தின அவரை மக்களுக்குக் காண்பிப்பதற்காக இவ்விதமாகச் செல்கிறேன் என்று பதிலளித்தார்.

சிலுவையில் அறையுண்ட இயேசு கிற... Read More >>