TNDTA

பள்ளி வரலாறு :


            தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல அறநெறிக் கழக அமைப்பின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளும் எம் டூவீபுரம் பள்ளியூம் ஒன்றாகும். எம் டூவீபுரம் பள்ளி 1937-ஆம் ஆண்டிலிருந்து 1 முதல் 5 வகுப்புகள் உள்ள ஆரம்ப பாடசளையாகத் திகழ்ந்தது. பின்னர் 1970 ஆம் ஆண்டு முதல் நடுநிலை பள்ளியாக உயர்வு பெற்றுள்ளது. தற்போது எம் பள்ளியில் பட்டதாரி ஆசிரியை தலமை ஆசிரியையாகவும், 24 இடைநிலை ஆசிரியைகளும், 1 தமிலாஸிரியையும், 1 உடற்கல்வி ஆசிரியையும், 2 கைத்தொழில் ஆசிரியைகளுமாக 29 ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றன. எம் பள்ளியில் 1000 மாணவ - மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். அருட்திரு. J. ஜேசன் செல்வகுமார் M.A.,Bed.,B.D., C.P.S.D.,MIN., அவர்கள் பள்ளி தாளாளர் இருந்து எம் பள்ளியின் வளர்சியில் ஆர்வம் காட்டி ஆசிரிய ஆசிரியைகளை இப்பணியில் ஊக்குவித்து வருகின்றார்கள். கடந்த வருடத்தில் எம் பள்ளித் தாளாளர் அவர்களின் முழு முயற்சியால் எட்டு வகுப்பறைகள் திறம்பட கட்டி முடிக்கப்பட்டு எமது திருமண்டல பேராயர் சேகர கமிட்டியாளர் மகாகனம் Rt. Rev. Dr. J.A.D. ஜெபச் சந்திரன் B.Sc.,MA.,B.D., D.D. அவர்களால் பிரதிஷ்டை செய்யப் பட்டது. இது எம் பள்ளியின் வளர்ச்சியின் ஒரு மைல் கல்.

பள்ளி வரலாறு:   

            எம் பள்ளியானது  காலை 9.00 மணிக்கு தொடங்கி மாலை 4.00க்கு முடிவடைகிறது.தினமும் காலையிலும் மதிய இடை வேளைகளிலும் வாய்பாடு வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. தினமும் மாணவ மாணவியர்கள் சீருடையில்  பள்ளிக்கு வருகின்றார்கள். ஒவ்வொரு திங்கட்கிழமையும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய ஒறுமைபாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு  வருகிறது. பிற நாட்களில் காலை சரியாக 9.15 க்கு அசெம்பிளி ஆரம்பாகும். அவ்வமையம் தினசரி செய்திகள், பொது அறிவு செய்திகள், தினம் ஒரு திருக்குறள், இன்றைய சிந்தனை, போன்றவை நடைபெறுவது சிறப்பாகும். மேலும் சுதந்திர தினம், குடியரசு தின விழாக்கள் கொண்டாடப்பட்டு மாணவர்களின் தேசிய உணர்வு வளர்க்கப்படுகிறது. 

        பள்ளி மாணவ - மாணவியர்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தோடு மாணவர்களும் இலவச சத்துணவு, பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றது. மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளிக்கொணரும் வகையில் பேச்சுபோட்டி, எழுத்துப்போட்டி, ஓவியப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டி, ஆண்டு விழா போன்றவை திறம்பட நடைபெற்று வருகிறது.  

கல்வி நிலை: 

          ''இருக்கிற கோயிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்து அறிவு என்னும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்"என்ற கவிஞனின் கூற்றுப்படி மாணவர்கள் அறிவுத் திறனில் சிறந்து விளங்கத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒழுக்கமும், கல்வியும் இணையும் போது தான் மனிதனின் கல்விக்கு அர்த்தம் உண்டு. என்பதை உணர்ந்து அவற்றிற்கேற்ப பல செயல் திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்தி வருகிறோம். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல், அறிவியல் - தமிழ் ஆகிய அணைத்து பாடங்களும் தமிழக அரசின் பாடத் திட்டத்தின் கீழ் முறைப்படி அதிக ஆர்வமும், தகுதியும் உள்ள ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றன. இடைத் தேர்வுகள் மூலம் மாணவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்தி வருகிறோம். மேலும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் தனிக்கவனம் செலுத்தப் பட்டு வருகிறது. படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் தனிப்பயிற்சி ஆசிரியர்கள் மூலம் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன.

            எம் பள்ளியில் இவ்வாண்டு 64 மாணவர்களும் 58 மானவியர்க்களுமாக 112 பேர் 8 ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறார்கள். தேர்வுகளில் வெற்றி பெற்று உயரிய மதிப்பெண்கள் பெறும் இருவருக்கு பரிசுகள் வழங்கி,அவர்களை ஊக்குவித்து வருகின்றோம். பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எம் பள்ளியில் புதிதாக சேர்க்கப்படும் முதல் மற்றும் அனைத்து வகுப்பு மாணவ -மாணவியர்களுக்கு இலவச சீருடை, இலவச புத்தகம், இலவச நோட்டுகள் இலவச புத்தகப்பை அனைத்தும் இலவசமாக வழங்கி வருகின்றோம். வருகிற கல்வியாண்டில் எம்பள்ளியில் கணினி பயிற்சி, கிந்தி, கராத்தே பயிற்சி, ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி, பரத நாட்டியம் போன்ற இதர பயிற்சி வகுப்புகள் நடத்த எம்பள்ளியின் தாளாளர் அவர்களால் திட்டமிடப் பட்டுள்ளது. மாணவர்களின் ஒழுக்கம், கல்வி, காலம் தவறாமை போன்ற பண்புகளில் கவனம் வைத்து எம் பள்ளி ஆசிரியர்கள் அயராது உழைத்து வருகின்றார்கள்.

அரசு நலத்திட்ட உதவிகள் :  

            நமது தமிழக அரசு பள்ளிகளுக்கு வழங்கும் நலத்திட்டங்களான இலவச புத்தகங்கள், இலவச நோட்டுகள், இலவச சீருடைகள் மற்றும் கல்வித் தொகைகள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றது. முட்டையுடன் கூடிய இலவச சத்துணவு அமைப்பு எம் பள்ளியில் சீரிய முறையில் இயங்கி வருகின்றது.

          "எல்லாக் கல்விகளின் நோக்கமும் ஒரு முழு மனிதனை உருவாக்குவதே" என்றார் சுவாமி விவேகானந்தர். அதைக் கருத்தில் கொண்டு எம் மாணவர்களுக்கு கல்வியோடு வேதபாடக் கல்வி, நல்லொழுக்கக் கல்வி, உடற்கல்வி, தொழிற்கல்வி மற்றும் பொது அறிவு வகுப்புகளும் நடத்தப் படுகின்றன. எம் பள்ளியில் மாதந்தோறும் மாணவர் சங்கம் நடைபெற்று வருகிறது. மேலும், பெற்றோர் - ஆசிரியர்சங்கம், அனைவரும் கல்வி இயக்கம் நடைமுறையில் உள்ளது. தற்போதைய கல்வி முறையான ABL மற்றும் ALM வகுப்புகள் திறம்பட நடத்தப்பட்டு கல்வி அதிகாரிகளால் பாராட்டினை பெற்று வருகிறது. ஆண்டிற்கான ஆய்வு 17.09.2008, 18.09.2008-இல் நடைபெற்றது. கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் அவர்கள் அவர்கள் பள்ளியின் கல்வித் தரம் மிக நன்று, தலைமை ஆசிரியருக்கும் ஒத்துழைப்பு அளிக்கும் பிற ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். பள்ளி நடை முறை மிகவும் பெருமிதத்துடன் தெருவித்து கொள்கின்றோம்.

         எம் பள்ளியில் பயின்று உயர் நிலை, மேல் நிலைப் பள்ளிக்குச் செல்லும் எம் மாணவ - மாணவியர் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று அங்கே முதன்மை பெறுவதுடன் பல போட்டிகளிலும் வெற்றிகள் பல பெற்று எம் பள்ளிக்கு பெருமை சேர்த்து தருகின்றார்கள். எம் பள்ளியில் பயின்ற மாணவச் செல்வங்கள் பலர் இன்று அறிவியல், மருத்துவம், பொறியியல், அரசியல், ஆன்மீகம் என்று பல துறைகளில் இடம் பெற்று உள்ளார்கள் என அறியும் போது பெருமிதத்தால் எம் பள்ளியே பரப்பளவில் கொஞ்சம் உப்புகிறது.

அனைவருக்கும்கல்விஇயக்கம் :

          எம் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கமும் மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. இதன் கல்விக் குழு தலைவராக 43 வது வார்டு கவுன்சிலர் திருமதி. A. மூக்கம்மாள் அவர்கள் இருக்கின்றார்கள். கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்காகவும், பள்ளியின் மேம்பாட்டுக்காகவும், அனைத்து பிள்ளைகளும் ஆரம்ப கல்வியினை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இவ்வியக்கத்தின் தலைவர் எம் பள்ளிக்காக பல உதவிகளை மேற்கொண்டு எம் பள்ளி மேலும் வளம் பெற பேருதவி புரிந்துள்ளார்கள். இவ்வியக்க உறுப்பினர்களும் தகுந்த ஒத்துழைப்பு கொடுத்து தங்கள் நல் ஆதரவை வழங்கி வருகின்றன. அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் வழி காட்டுதலின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல் வழிக் கற்றல் வகுப்புகளை சென்னையில் இருந்து வந்த சிறப்பு பார்வையாளர்கள் பார்வையிட்ட போது எம் பள்ளியின் செயல் வழிக் கற்றல் வகுப்புகள் மிகக் சிறப்பாக நடை பெறுவதை கண்டு தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளிலும் சென்னையில் உள்ள பள்ளிகளிலும் எம் பள்ளியின் பெருமை பேசும் படியாக அமைந்தது அதைத் தொடர்ந்து எம் பள்ளி தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது. எம் பள்ளியில் செயல் வழிக் கற்றல் வகுப்பு திறம்பட நடை முறைப் படுத்திய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்களின் செயல் பாடுகளை மேற்பார்வையிட்டு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் திரு. விஜயகுமார் IAS அவர்கள் அதிகாரப் பூர்வமாக எம் பள்ளிக்கு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார்கள். இது எம் பள்ளிக்கு கிடைத்த தனிச் சிறப்பாகும்.

          அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் நடை பெற்ற மாவட்ட அளவிலான சிகரம் தொட்ட ஆசிரியர் போட்டியில் எம் பள்ளியிலிருந்து கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களும் வெற்றியுடன் பரிசுகளும் சான்றிதழ்களும் பல பெற்று சிகரம் தொட்ட ஆசிரியர்கள் ஆனார்கள் என்பதை கூறிக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம். எம் பள்ளி மாணவர்களும் மாவட்ட அளவில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி பள்ளிக்கு பெருமை சேர்க்கின்றார். RSP எனப்படும் சாலை பாதுகாப்பு பணியிலும் எம் மாணவர்கள் கலந்து கொண்டு பல கேடயங்களை வாங்கி குவித்துள்ளனர் என்பதை கூறுவதில் பெருமிதம் கொள்கிறோம். எம் பள்ளியில் தேசிய பசுமைப் படை சுற்றுச் சுழல் மன்றங்கள் சிறப்பாக இயங்கி வருகிறது. 

பெற்றோர் - ஆசிரியர்சங்கம் :

      பள்ளி ஆசிரியர்கள் பெற்றோராகவும் இல்லத்தில் பெற்றோர்கள் ஆசிரியர்களாகவும் செயல்பட்டாதான் இந்த இளைய தலைமுறையை இமயம்வரை கொண்டு செல்ல முடியும். எனவே பெற்றோர் ஆசிரியர் சங்கம் என்றகளம் கண்டு, பெற்றோர்களையும் பகுதி பிரமுகர்களையும் அழைத்து சிறப்பு கூட்டங்கள் பல ஏற்பாடு செய்து இளையகண்மணியின் இடர்களை தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.

 

About TNTDTA Middle school

            This school was started as primary school in the year of 1937 followed by it was recognized as middle school in the year of 1970. Totally there are 29 teachers including our Headmistress who graduated as Doctor. Our school strength at present is more than 1000

            Our correspondent Rev.Dr.J.Jason Selvakumar.M.A.,B.Ed., B.Ed., B.D.C.P.S., D.MIN. Who is really encouraging all the staff actively participating for the improvement of the school. There are 8 new classrooms were opened through his effort and it was dedicated by our TNDiocease Bishop Rt.Rev.J.A.D.Jebachandran which was in mile stone in this school history

Activities:

• Our school starts with prayer at 9.00am and ends up at 4.20pm
• Special coaching classes is given for all children at every morning and evening
• We have flag hosting on every Monday as well as our National Festivals such as Independence Day, Republic day and etc.....
• We have so many Government plans such as Nutrient meals, Sarva siksha abiman, free books and uniform for all the students are helpful for our pupils in our school.
• We have National Green Crops (NGC) in action.
• We are teaching our students through Activity Basic Learning methodology (ABL), and Activity Learning Methodology (ALM) and our school has got appreciation by our district educational officers for these programmers.
• We conduct competition programs in speech, writing, drawing games and etc...
• We are celebrating our sports day, Teachers day, Annual day and our National festivals in a special manner.
• Last year there were 64 boys and 58 girls, totally 112 pupils had gone through E.S.L.C examination and passed through.
• Since this is a Christian institution, we conducting Bible Teaching, Physical Education, Education in Industrial art and General knowledge (G.K)
• Every month we have Students Association meeting and Parents Teachers Association meeting.
• Also our students Participated in RSP and got championship
• We are planning of Computer education, Hindi classes, Karathae classes, spoken English classes, Bharatha Naatiyam classes and etc...